அத்தாவை அடைய அத்துவா. 1.
அத்துவான, அத்துவைதம், அத்தா, அத்துவா இந்த வார்த்தைகள் எல்லாம் ஒன்றுக் கொன்று தொடர்புடையவைகளா ? காடு, காடு, காடு ஒரே காடு. திசைகள் அழிந்து போனக் காடு. காடு மட்டுந்தான் அங்கு வேறெதுவும் கிடையாது. அதுதான் அத்துவானக் காடு. அத்துவைதம் என்றால் இரண்டற்ற ஒன்று என்று சொல்வார்கள். காடு என்றால் காடு மட்டுமா இருக்கிறது ? மரம் செடி, கொடி, விலங்குகள் போன்ற எல்லாம் சேர்ந்ததுதான் காடு. அது போல இரண்டற்ற ஒன்றான பரம்பொருள் என்கிற பொழுது அதற்குள் இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் இருக்கின்றன. அதுவே யாவுமாக இருக்கிறது. அது அத்துவான வனம், இது அத்துவைத பரம். இப்படி அதுவே எல்லாமாக இருக்கிறபடியால், பரம் பொருளை எதன் மூலமாகவும் அடைந்திட முடியும். ஏனென்றால் அதுவே யாவுமாக நிற்பதால் அதனை எதன் மூலமாகவும் அடைந்திட முடியும். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு தத்துவமாக விளங்கி அருளும் பரம்பொருளை அதனதன் தத்துவங்களை உணர்ந்து அதன் வழி அடைந்திட முடியும். அத்தகைய வழிகளையே அத்துவாக்கள் என்பார்கள். பண்டைய ரிஷிகள் இத்தகைய சூக்குமமான வழிமுறைகளைக் கையாண்டார்கள். அத்துவாக்கள் என்கிற பொழுது காலாத்துவா, புவனாத்துவா, வன்னாத்துவா, பதாத்துவா, மந்திராத்துவா, தத்துவாத்துவா என்று ஆறு வகைப்படும்.

ஒளியான பரம்பொருள் ஒலியாகி பின் சப்த ஸ்வரங்களாகி விரிந்து விரிந்தே இந்த பிரபஞ்சமாகி நிற்கின்றது. இதைத்தான் பிரம்மாவின் மானஸ புத்திரர்களான சப்த ரிஷிகளாகச் சொல்வதோடு இன்னார் இன்ன ரிஷியின் கோத்திரம் என்று அடையாளப்படுத்திக் கூறுவார்கள். அதாவது அவர்களில் இருந்தே இந்த உலகம் தோன்றியது என்பது சூக்குமக் கருத்தாகும். ஆகாயத்தில் வாயு, மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, துருவம் என்று ஏழு மண்டலங்கள் உண்டு என்றும், சப்த ரிஷிகளான எழுவரும் துருவம் எனப்படும் இறைவனின் பரம்பதத்தைச் சுற்றி மண்டலங்களாக வீற்றிருப்பதாகச் சொல்வார்கள். இந்த ஏழு மண்டலங்களில் ஆவகம், பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்று சப்த வாயுக்கள் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நிலையை ஒளியிலும் காணலாம். சூரியனில் இருந்து வெளிப்படும் கதிரானது ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இதைத்தான் சூரியனுடைய தேருக்கு ஏழு குதிரைகள் என்பர். சூரியனை கடவுளாக வழிபடுபவர்களுக்கு அந்த ஏழு நிறங்களே சப்த ரிஷிகள். இந்த ஏழு வண்ணங்களில் சேராத நிறம் வெண்மை. பரம நிர்மலமான தூய்மையான நிறம் வெண்மை. அது சுத்த தத்துவ நிலையைக் குறிக்கிறது. அதாவது பரம்பொருள் நிலையைக் குறிக்கிறது. எனவேதான் வள்ளலார் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்தார் என்பதை கவனிக்க வேண்டும். எத்தனையோ ஆயிரக் கணக்கான மொழிகள் பூமியில் பேசப்பட்டாலும், இறைவனை அடைவதற்கு ஏற்ற மொழியானது நம் தமிழ் மொழியின் ஆதி கிரந்தமேயாகும். அதில் 51 அட்சரங்கள் உண்டு. இந்த அட்சரங்கள் என்பது வேறு எதுவுமில்லை, இந்த அண்டமெங்கும் ஒலிக்கும் பல்வேறு இயற்கையின் ஒலிகளேயாகும்.அவற்றிலிருந்தே வேதம் தோன்றியது. எனவேதான் கலைமகள் மொழி வடிவானவள் என்றும், 51 அட்சரங்களைக் குறிக்கும் விதத்தில் தன் கையில் 51 மணிகள் கொண்ட அட்சரமாலையை தரித்திருக்கிறாள் என்றும், அவளே வேதத்தின் உட்பொருளானவள் என்றும் சொல்கிறார்கள். அவளே ப்ரம்மாவின் நாவில் சப்தமாக உதிப்பவள். அந்த சப்தத்திலிருந்தே உலகம் தோன்றியது என்பார்கள்.
இப்படி இயற்கையின் ஒலியாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் 51 அட்சரங்கள் நம் உடலிலும் உயிர் துடிப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களின் இதழ்களிலும் ஒவ்வொரு அட்சரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 50 இதழ்களில் 50 அட்சரங்களும் 51வது அட்சரமாக இறைவன் உயிரோசையாக நின்று நம் உயிர் வாழ்க்கையை நடத்தி அருள்கிறார். இவற்றை தன் தவ வலிமையால் கண்டறிந்த நம் முன்னோர்களான ரிஷிகள் அந்த அட்சரங்களில் இருந்து மொழியை வடிவமைத்தனர். உலகில் பல மொழிகள் இருந்தாலும், எந்த மொழி தொன்மையானது என்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறைவனது அதாவது இயற்கை ஒலிகளில் இருந்து வடிவமைக்கப்பட்ட மொழி நம் தமிழ் மொழியின் மூல கிரந்தமே ஆகும். எனவேதான் அதை சிவன் தந்த மொழி என்று சொல்வார்கள். எனவே இந்த ஒலிகள் யாவும் பரம்பொருளான சிவனின் உறுப்புக்கள் என்பர். அத்தகைய ஒலிகளை மந்திர வடிவங்களாக்கி, அவற்றை எலும்பு, தோல், மாமிசம், இரத்தம் இவற்றோடு ஒப்பிட்டு தியானம் செய்து மலபந்தங்களை அறுத்து பரமனோடு சேர வேண்டும் என்பது கோட்பாடு. அத்தகைய வழி முறைகள் அத்துவாக்கள் எனப்பட்டன. எத்தனையோ யோக நிலைகள் இருந்தாலும், அத்துவா என்கிற மந்திர தேக வழியில் அத்தாவை தியானித்து சிவ நிலையை அடைவது என்பது எளிய முறையாகும். இதுவே கலியுகத்திற்கு ஏற்ற முறை என்றும் சொல்வது உண்டு.
தொடரும்...
தொடரும்...
No comments:
Post a Comment