கேள்வி - ஐயா உருத்திராக்கத்தின் சிறப்பு பற்றி சென்ற பகிர்வில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு ஒரு ஏழு முகம் கொண்ட உருத்திராக்கம் கிடைத்தது. ஆனால், அதை அணியக் கூடாது என்று சொல்கிறார்களே ?
இராம் மனோகர் - பொதுவாகவே ருத்திராட்சம் அணிய பலவிதமான கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. அது ஏனென்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது, ஒரு புனிதமான பொருளை தரித்துக் கொண்டு தவறான செயல்களில் ஒருவன் ஈடுபடும் பொழுது, அந்தப் பொருளைப் பற்றிய சிறப்பு மனதளவில் குறைந்து போகும். நம்பிக்கை தளர்ந்து போகும். எனவே சில கட்டுப்பாடுகள் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது புலனாகிறது. ஆலயங்களுக்கென்று சில கட்டுப்பாடுகள், பள்ளிக் கூடங்களுக்கென்று சில கட்டுப்பாடுகள், நூலகங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள், விரத நாட்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் போன்ற கட்டுப்பாடுகள் அனைத்துமே அந்தந்த காரியங்கள் மனதளவில் எந்தவித பாதிப்பும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே. அதிலும் தெய்வ காரியங்கள் எனும் பொழுது உளத் தூய்மையும், உடல் தூய்மையும் மிகமிக அவசியமாகும். தேவி பாகவதம், ருத்ராக்ஷ ஜாபாலோ பனிஷத், அட்ச மாலிகா பனிஷத் போன்ற உபநிடதங்களிலும், பல்வேறு புராணங்களிலும் ருத்ராட்சத்தின் சிறப்பும், மகிமையும் விளக்கப்பட்டுள்ளன.
உச்சியில் ஒரு மணியும், தலையில் முப்பத்தாறு மணிகளும், கழுத்தில் முப்பத்திரண்டு மணிகளும், கைக்கு சிவந்த மணிகளாக பதினாறு மணிகளும், மார்பில் ஐம்பது மணிகளும், செவிக்கு ஆறு மணிகளும் அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு உண்டு. 25 மணிகள் கொண்ட செப மாலையால் செபித்தால் முக்தி, 26 மணிகள் கொண்ட மாலையால் செபித்தால் சிவானுபவம், 18 மணிகள் கொண்ட மாலையால் செபித்தால் சத்துருக்கள் அழிவு. 27 மணிகள் கொண்ட மாலையால் செபித்தால் செல்வ வளம், 18 மணிக்கு உடல் வலிமை, 30 மணிக்கு புண்ணிய பலன் மிகும், அபிசார கன்மங்களுக்கு 15 மணிகள் கொண்ட செப மாலையால் செபிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ருத்திராட்சத்தை கண்டாலே பாவம் அகலும், சித்திகள் உண்டாகும், மணிகள் உடலைத் தீண்டினால் புண்ணியம் சேரும், ஆதலால் அனைவரும் பூணுக என்று வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. காதிலும், கண்டத்திலும் அணிந்திப்பவர்கள் எப்பொழுதும் அணிந்திருக்கத் தடையில்லை என்றும், மாலைகளாக அணிந்திருப்பவர்கள், மலஜலம் கழிக்கும் பொழுது கழற்றி விட வேண்டும் என்று சொல்கிறார்கள். என் அண்ணன் என்னிடம் கூறும் பொழுது '' உருத்திராட்சம் அணிந்தால் நன்மையோ, தீமையோ இரண்டு பங்கு பலன் தரும்'' என்பார்.
நீங்கள் குறிப்பிட்ட ஏழு முக மணியைப் பொருத்த வரை ஆதிசேஷன் மற்றும் சப்த கன்னிகளின் அருளைப் பெற்றது என்பர். இதை அணிபவர்கள் சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். எனவே தர்ம சிந்தனை மேலோங்கும். நீதிநெறியை கடைபிடிக்கத் தூண்டும். தவத்தில் ஆர்வம் கூடும். விஷ ஜந்துக்களால் தீங்கு நேராது காக்கும். திருடியதால் ஏற்பட்ட பாவத்தை போக்கும். திருடும் எண்ணத்தை அழிக்கும். செல்வ வளம் பெருகும், நாக தோஷ நிவர்த்தியாகும். புதையலை அடையாளம் காட்டும், எதிரிகளை பலவீனப்படுத்தும், எதிர் பாலினரை வசிகரிக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும்,காயத்ரி மந்திரம் ஜெபிப்பதன் பலன் கிட்டும், வாதம், வலிப்பு, திக்குவாய், கருச்சிதைவு போன்ற துன்பங்கள் நீங்கும். ஆனால், இதை தனியாக அணியக் கூடாது. ஏனெனில் இதன் அதிகமான ஆற்றலை யோகிகளைத் தவிர மற்றவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது. எனவே எட்டு முக ருத்திராட்சத்தோடு அணிந்து கொள்ளலாம். எட்டு முகம் விநாயகரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அஷ்ட மாதர்களின் அருளையும் பெற்றது. அதாவது சப்த மாதர்களோடு கங்கையும் கூடி அஷ்ட மாதர்களாகும் என்பர். எனவே இந்த மணியை அணிவதால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் உறுதி.
''மஹதீ ஞானஸபத்தி ஸுசிர்தாரயத; ஸதா |
அஷ்ட வக்த்ர து ருத்ராக்ஷமஷ்ட மாத்ரதி தைவதம் ||'' என்று ருத்ராக்ஷ ஜாபாலோ உபநிஷத் கூறுகிறது. எனவே ஒழுக்கத்தூடன் எவனெருவன் எட்டு முக ருத்திராட்சம் அணிந்து ஒழுகுகிறானோ, அவன் ஞானம் பெறுகிறான். இதை அணிவதால் பஞ்ச மகா பாதகங்களைச் செய்த பாவங்களும் நீங்கும். எனவே தாங்களிடமுள்ள ஏழுமுக ருத்திராட்சத்துடன் ஒரு எட்டுமுகமும் சேர்த்து அணிந்து கொள்ளுங்கள்.
''மஹதீ ஞானஸபத்தி ஸுசிர்தாரயத; ஸதா |
அஷ்ட வக்த்ர து ருத்ராக்ஷமஷ்ட மாத்ரதி தைவதம் ||'' என்று ருத்ராக்ஷ ஜாபாலோ உபநிஷத் கூறுகிறது. எனவே ஒழுக்கத்தூடன் எவனெருவன் எட்டு முக ருத்திராட்சம் அணிந்து ஒழுகுகிறானோ, அவன் ஞானம் பெறுகிறான். இதை அணிவதால் பஞ்ச மகா பாதகங்களைச் செய்த பாவங்களும் நீங்கும். எனவே தாங்களிடமுள்ள ஏழுமுக ருத்திராட்சத்துடன் ஒரு எட்டுமுகமும் சேர்த்து அணிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment